உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழண்டி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

பழண்டி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

திருபுவனை:  திருபுவனை, பழண்டி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்த  30ம் தேதியன்று, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 5.00 மணிக்கு, நான்காம் கால பூஜையும்,  7.30 மணிக்கு, கலசப் புறப்பாடும் நடந்தது. காலை 8.35 மணிக்கு விநாயகர், முருகர், மாரியம்மன் ராஜகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா  கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பிப்டிக் சேர்மன் அங்காளன் எம்.எல்.ஏ., மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி ராஜசேகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !