தில்லைக்காளி கோவிலில் மகா சண்டி யாகம்!
ADDED :3843 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி தில்லைக் காளிக் கோவிலில் மகா சண்டி யாகம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் மே மாதம் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா சிற ப்பாக நடைபெற வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் நடந்தது. நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் நடந்த சண்டி யாகத்திற்கு தியாகப்பா தீட்சிதர் தலைமை தாங்கினார். காலை முதல் மதியம் வரை நடந்த யாகத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.