உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கரூர்:கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம், நேற்று காலை கோலாகலமாக நடந்தது. கலெக்டர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 25ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா, கிராம சாந்தியுடன் துவங்கியது. 26ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 27ம் தேதி ஸ்வாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான, நேற்று 3ம் தேதி காலை 8.20 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரத்தினவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராஜாராம், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில் பிரகாரங்களை சுற்றி வந்த திருத்தேர், சரியாக காலை 9.15 மணிக்கு கோவில் முன், நிலையை அடைந்தது. தேரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் (பொ) முத்துக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !