உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம்!

பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம்!

சிதம்பரம்: சிதம்பரம் சிவசண்முகம் தெரு பாலசுப்ரமணியர் சுவாமி கோவில் 123வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. சிதம்பரம் 1வது  வார்டு சிவசண்முகம் தெருவில் அமைந்துள்ள பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் 123ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவைö யாட்டி, கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பட்டு வந்தது. 9ம் நாள்  விழாவாக நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. அதனைத் தொடர்ந்து 10 நாள் விழாவாக நேற்று பங்குணி உத்திர காவடி உற்சவம்  நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !