குறிஞ்சி மலை குமரனுக்கு 1008 காவடி!
ADDED :3844 days ago
கொடைக்கானல்: கொடைக்கானலில் குறிஞ்சி மலை குமரனுக்கு பக்தர்கள் 1008 காவடிகளை எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்கள் குறத்திசோலையில் இருந்து தீர்த்தம் எடுத்து நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயிலை அடைந்தனர். அங்கிருந்து நேற்று காலை 9 மணியளவில் காவடி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கே.ஆர். ஆர். கலையரங்கம் வழியாக ஏழு ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் , 1 வது, 2 வது தெரு வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.எம். தெரு, வழியாக குறிஞ்சியாண்டவர் கோயிலை அடைந்தது. அட்டுவம்பட்டி, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், ஆனந்தகிரி, ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் 1008 காவடிகளுடன் வழிபட்டனர்.