உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டியில் பக்தர்கள் சிரமம்: கூடுதல் படித்துறை கட்ட வேண்டும்

வீரபாண்டியில் பக்தர்கள் சிரமம்: கூடுதல் படித்துறை கட்ட வேண்டும்

தேனி : வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் திருமணமும், கர்மகாரியமும் ஒரே இடத்தில் நடப்பதால் பக்தர்கள் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலுக்குள் திருமணம் முடித்த புதுமணத்தம்பதிகள், மணம் முடித்து ஊர்வலம் ஆற்றங்கரையில் ஊர்வலமாக கவுமாரியம்மன்கோயிலுக்கு வருகின்றனர். இதே இடத்தில் அமர்ந்து தினமும் பலர் கர்மகாரியங்கள் செய்கின்றனர். இதனால் தடை ஏற்பட்டு பல புதுமணத்தம்பதியினர் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சிக்கலை தவிர்க்க ரோட்டின் கிழக்கு பகுதியில் கோயிலை ஒட்டி உள்ள படித்துறையினை முழுமையாக திருமண தம்பதியினருக்கு ஒதுக்கி விட்டு, ரோட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் படித்துரை கட்டித்தர சுற்றுலாத்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்துள்ளன. ஆனால் அந்த இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு பொதுப்பணித்துறை அனுமதியின்றி கட்ட முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, கூடுதல் படித்துறை கட்டுவதற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !