திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் புனித வெள்ளி அனுஷ்டிப்பு!
ADDED :3838 days ago
திருப்பூர்: திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சர்ச்களில், நேற்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்பட்டது. புனித வெள்ளியான நேற்று, திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள கேத்ரீனாள் சர்ச், குமார் நகர் மற்றும் இடுவம்பாளையத்தில் உள்ள சூசையப்பர் சர்ச், நல்லூர் நற்கருணை சர்ச்களில், நேற்று மாலை புனித வெள்ளி திருச்சடங்குகளுடன் துவங்கிய நிகழ்ச்சியில், பெரிய சிலுவைப்பாதை, இறைவார்த்தை வழிபாடு, சிலுவை ஆராதனை மற்றும் நற்கருணை வழிபாடுகள் நடந்தன. கிறிஸ்தவர்கள் திரளானோர் பங்கேற்று, சர்ச் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, ஸ்தலங்களின் முன் நின்று, ஆராதனை நடத்தினர்.