உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித வளனார் ஆலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம்

புனித வளனார் ஆலயத்தில் சிலுவைப்பாதை ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. மறைமாவட்ட நிர்வாகி ஆரோக்கியசாமி, பாதிரியார் ஸ்டேன்லிராபின்சன் தலைமையில் உலக நன்மை வேண்டி திருப்பலி நடந்தது. புனித வியாகுல அன்னை ஆலயத்தில் பாதிரியார்கள் செல்வராஜ், ஆனந்த் தலைமையில் திருப்பலி நடந்தது. திருச்சிலுவை ஆராதணை, திருவிருந்து, சிலுவை முட்டி செய்தல் ஆகியவை நடந்தன. திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர். புனித சனிக்கிழமையான இன்றிரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடக்கிறது.செந்துறை: நத்தம் செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. நல்லதிக்கன்பட்டி பிரிவில் துவங்கிய ஊர்வலம் குரும்பபட்டி வழியாக ஆலயம் சென்றடைந்தது. பாதிரியார்கள் லாரன்ஸ், மரியசெல்வன், வின்சென்ட் பெர்னாண்டோ, தாஸ் ஆகியோர் தலைமையில் மழை மற்றும் உலக நன்மை வேண்டி கூட்டுத்திருப்பலி நடந்தது. புனித வெள்ளி சடங்கு, இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதணை, திருவிருந்து, சிலுவை முட்டி செய்தல் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று புனித சனிக்கிழமை முன்னிட்டு இரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடைக்கானல் : அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட்டில் அருகில் உள்ள சி.எல்.எஸ். புக் ஷாப்பிலிருந்து புறப்பட்டு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் வழியாக திரு இருதய ஆலயத்திற்கு சென்றனர். மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். சலேத் அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ ஆலயத்திலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதணை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !