உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் யார்?

சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் யார்?

மதுரை: இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அஸ்தம் நட்சத்திரத்தில், ராகு பகவான் சந்திரனை விழுங்குகிறார். மாலை 3.46 மணிக்கு துவங்கும் கிரகணம் 5.30 மணிக்கு முழுமை அடைகிறது; இரவு 7.15 மணிக்கு விடுகிறது. உத்திரம், அஸ்தம், சித்திரை, திருவோணம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமை பிறந்தவர்களும் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும் நீராடி கோயில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !