தேவாரம் ஓதுதல் விழா
ADDED :3842 days ago
அவிநாசி : திருநாவலூர் தம்பிரான் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவாரம் முற்றும் ஓதுதல் விழா, அவிநாசியப்பர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. பவானி சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள், தேவார பாடல்களை பண்ணிசைக்க, சிவனடியார்கள் பாடல்களை முற்றும் ஓதினர். மகேஸ்வர பூஜை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி, பவானி, திருப்பூர் சிவனடியார்கள் பங்கேற்றனர்.