புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா கோயிலில் நற்கருணை பவனி
ADDED :5291 days ago
புதுச்சேரி : புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா கோயிலில் தேவ நற்கருணை பெருவிழா சிறப்பு பவனி நடந்தது. புதுச்சேரி, கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமை தாங்கினார். ஆலயத்திலிருந்து புறப்பட்ட நற்கருணை பவனி, மிஷன் வீதி, செயின்ட் தெரேஸ் வீதி, காந்தி வீதி, நீடராஜப்பையர் வீதி வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.