உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்கண்டார் கோயிலில் சைவ சித்தாந்த பயிற்சி

மெய்கண்டார் கோயிலில் சைவ சித்தாந்த பயிற்சி

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவி லில் சைவ சித்தாந்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. கோயில் அறவுரை மண்டபத்தில் நடந்த பயிற்சிக்கு மடத்தின் நிர்வாகி அம்பலவாணத்தம்பிரான் சுவாமிகள் தலைமை தாங்கினார். ஏ.கே.டி., கல்வி நிறுவன தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சிங்காரவேலன் சிவஞான போதத்தின் 8ம் சூத்திரம் குறித்து பயிற்சி அளித்தார். முகாமில் நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருத்தாச்சலம் மையங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் மெய்கண்டாருக்கு சிறப்பு அபிஷேமும், மதியம் மகேசுவர பூஜையும் நடந்தது. மணிசேகரன், தமிழழகன், பால்ராஜ், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !