மணவாளப்பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :3847 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே அர்ஜூணா நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. அதிகாலையில் மந்திரங்கள் முழங்க யாகபூஜையுடன் துவங்கியது. பெருமாள், பத்மாவதி தாயாருக்கு 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் யாகபூஜையில் பூஜிக்கப்பட்ட நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஆயிரத்தெட்டு விஷ்ணு சகஸ்கரநாம பாராயணம் செய்து வழிபட்டனர். அன்னதானமும் நடந்தது.