உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலவச கீதை வகுப்பு இன்று துவக்கம்

இலவச கீதை வகுப்பு இன்று துவக்கம்

கோவை : சமஸ்கிருத பாரதி சார்பில் இலவச பேச்சுப்பயிற்சி மற்றும் பகவத் கீதை வகுப்புகள் இன்று முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. ஆர்.எஸ்., புரம் புரந்தரதாசர் கலையரங்கில், மாலை, ௬:௦௦ முதல், ௮:௦௦ மணி வரை இலவச வகுப்புகள் நடக்கின்றன. இவ்வகுப்பில், 13 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் ஜாதி, மத பேதமின்றி பங்கேற்கலாம். மேலும், சமஸ்கிருத முன் அறிவு தேவையில்லை.பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு தொலைதுாரக்கல்விக்கான வார வகுப்புகளில், பகவத் கீதை, சமஸ்கிருத இலக்கணம், ஸ்லோகன்கள் பயிற்றுவிக்கப்படும். முன்பதிவுக்கு, 94433 94367/68/69 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !