எல்லையம்மன் கோல்விலி 12ல் ஜாத்திரை திருவிழா
ADDED :3854 days ago
கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துாரில், வரும் 12ம் தேதி, ஜாத்திரை உற்சவம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துாரில் உள்ள எல்லையம்மன் கோவிலில், வரும் 12ம் தேதி, ஜாத்திரை திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த மாதம் 31ம் தேதி, கெங்கையம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின், கடந்த 3ம் தேதி, விநாயகருக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 4ம் தேதி பெருமாள் உற்சவமும் நடந்தது. பின், நேற்று முன்தினம் இரவு, எட்டியம்மனுக்கு காப்புக் கட்டுதலும், எல்லையம்மன் வீதியுலாவும் நடந்தன. வரும் 12ம் தேதி, ஜாத்திரை உற்சவம் நடைபெறவுள்ளது.