உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா!

கோவை பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா!

கோவை: கோவை, பாப்பநாயக்கன் பாளையம் அம்மன்நகரில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கிய இவ்விழாவில், திருவிளக்கு வழிபாடு, சக்தி கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், அம்மன் திருக்கல்யாணம் என, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நிகழ்வாக, அம்மன் வீதி உலா வந்து, தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !