மதுரை சித்திரை விழா: மாசி வீதிகளில் 30 அடிக்கு மேல் பந்தல்!
ADDED :3872 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை விழாவில் அம்மன், சுவாமி மாசி வீதிகளில் நகர் வலம் வருவதால், பந்தல் அமைக்க கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி இப்பகுதிகளில் ஏதாவது விழாக்கள் நடந்தால் சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் பந்தல் அமைக்க வேண்டும். சுவாமிகள் வலம் வரும்போது கேந்திரப்பூ, மருதைவேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படி செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.