உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் தேரோட்டம்: 18ம் தேதி விடுமுறை

ஸ்ரீரங்கம் தேரோட்டம்: 18ம் தேதி விடுமுறை

திருச்சி,:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வரும், 18ம் தேதி சித்திரை தேரோட்டம் நடப்பதால், அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சித்திரை தேர்திருவிழா வரும், 18ம் தேதி நடக்கிறது. தேர்திருவிழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !