வயலூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3870 days ago
திருச்சி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வயலூர் முருகன் கோவிலில், நேற்று திருக்கல்யாணம் நடந்தது.திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில், நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. கடந்த, 5ம் தேதி வள்ளிநாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடந்தது. 6ம் தேதி இரவு முருகன் வேடன் விருத்தனாக வருதல் நிகழ்ச்சியும், யானை விரட்டல் காட்சியும் நடந்தது. நேற்று, முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமணமாகாதவர்கள் மணக்கோலத்தில் இருந்த முருகன் - வள்ளியை தரிசித்து விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொண்டனர். கிரக நிலை சரியில்லாத குழந்தைகளை தத்து கொடுத்தல், தத்து திருப்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.