கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :3869 days ago
காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாண மஹோத்ஸ விழா நடந்தது. காரைக்கால் கோவில்பத்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண மஹோத்ஸவ விழா நடந்தது. விழாவையொட்டி மூலவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து மாலையில் மணமக்கள் கோலத்தில் எழுந்தருளிய சீதாராம திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.