உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொரவி கோவில் திருப்பணி: திருவாசகம் முற்றோதல் பூஜை!

தொரவி கோவில் திருப்பணி: திருவாசகம் முற்றோதல் பூஜை!

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் சிறப்பு பூஜை நடந்தது.  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த,  பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் ÷ காவில் உள்ளது. காஞ்சி மகா பெரியவர் தியானித்து தரிசனம் செய்த இக்கோவில் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி உள்ளது. தற்போது கோவிலில்  திருப்பணி செய்ய முடிவு செய்து, நேற்று காலை புதுச்சேரி  கல்யாணியம்மாள் தலைமையிலான சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நடந்தது.  கைலாசநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. பூஜைகளை புதுச்சேரி சிவநேய செல்வர் சரவணன்  செய்தார். திரளான  பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !