உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாடும் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்!

கூத்தாடும் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்!

சிதம்பரம்: சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம்  பெரியார் தெரு கூத்தாடும் பிள்ளையார் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி கடந்த 3ம் தேதி விக்÷ னஸ்வர பூஜையுடன் துவங்கியது.  5ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை துவங்கி 6 கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை  6ம் காலம் யாகசாலை பூஜை நடைபெற்று 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி பிரதான கோவில் கோபுரத்தில் 9:20 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதி, மூஷிக பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடந்தது.  விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. இரவு கூத்தாடும் பிள்ளையார் வீதியுலா  நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி சுந்தரமூர்த்தி குருக்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !