செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4202 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் செல்வ விநாயகர் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கால யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் விசேஷ சந்தி, கோபூஜை, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று 4ம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.