அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா
                              ADDED :3858 days ago 
                            
                          
                           அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா கடந்த மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. எட்டாம் நாள் விழாவாக நேற்று முன்தினம் பொங்கல் விழா நடந்தது. நேற்று அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து 21,51,101 சட்டிகளை ஏந்தியும், அதிகாலையில் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.