உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாள்மேல் நடந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாள்மேல் நடந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காளையார்கோவில்: காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காளையார்கோவில் வாள்மேல் நடந்த அம்மன்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 6.45 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை, 8.45 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. 9.40 மணிக்கு சிவாச்சாரியார்கள் , வேதமந்திரங்கள் முழங்க கோயில் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 10 மணிக்கு மூலஸ்தானம், விநாயகர், கருப்பர் பாரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !