உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி, 7ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, கோ மாதா பூஜை, பூர்ணாஹூதியும், மாலை, மஞ்சள் பிள்ளையார் வழிபாடு, மஹாவாஸ்து சாந்தி, ரஷா பந்தனம் முதல்கால யாக வேள்வி, பல்பொருள் வேள்வி பூஜையும் நடத்தப்பட்டது. நேற்று காலை, 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மங்கள திரவிய யாகமும், தீபாராதணையும் நடத்தப்பட்டது. 10 மணிக்கு கோபுர கும்பாபிஷேகமும், மூலாலய மஹா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !