பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3907 days ago
கரூர்: கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நகரத்தார் சங்கம் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், பழவகை, அரிசி மாவு, சந்தனம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நகரத்தார் சங்க செயலாளர் மேலை.பழனியப்பன், முருகன் மகிமைகள் பற்றி பேசினார். நகரத்தார் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது. மாலை, 6 மணிக்கு கரூர் நகரத்தார் சங்கம் சார்பில், 25வது மாத பவுர்ணமி கிரிவலம் நடந்தது.