காரைக்கால் அருணநந்தீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம்!
காரைக்கல்: காரைக்கால் நிரவியில் நேற்று ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ குமரன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. காரைக்கால் நிரவி அரசலாற்றுக்கு தெற்கு திசையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத,ஜெம்புநாத சுவாமி தேவஸ்தானத்திற்கு சேர்ந்த ஆனந்த வல்லி உடனுறை அருணநந்தீஸ்வர் ஆலயம் என்னும் ஸ்ரீ குமரன் கோவில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பணிக்காக கடந்த 1989ம் ஆண்டு வேலைகள் நடந்தபோது பூமிக்கடியில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையில் திருஞான சம்பந்தர் சிலையும் ஒன்று கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இவ்வாறு சிறப்பு மிக்க கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. கடந்த 3ம் தேதி அனுக்ஞை, தேவதானுக்ஞை,விக்னேஸ்வர பூஜைகளுடன் துவக்கியது.நேற்று காலை 6மணிக்கு கோ பூஜை,யாகசாலை 4ஆம் கால பூஜை தொடங்கி கடம் புறப்படு நடைபெற்றது. காலை 9.40. மணிக்கு விமான கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், எஸ்.பி.,பழனிவேல்,மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனார்.