உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மதேசம் திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பிரம்மதேசம் திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பிரம்மதேசம் கிராமம் கோனேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக  விழாவையொட்டி, ஏப்., 7ம் தேதி காலை 6 மணிக்கு மேல் மங்கள இசை. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், கோ மாதா பூஜை, பூர்ணாஹூதி தீபாரதணையும், மாலை 5 மணிக்கு மஞ்சள் பிள்ளையார் வழிபாடு, மஹாவாஸ்து சாந்தி, ரஷா பந்தனம் முதல்கால யாக வேள்வி, பல்பொருள் வேள்வி பூஜையும் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.   நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மங்கள திரவிய யாகமும், தீபாராதணையும் நடத்தப்பட்டது. 9 மணி முதல் 10 மணிக்குள் கோபுர கும்பாபிஷேகமும், மூலாலய மஹா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.   வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில் சிவாகம சிரோன்மணி ஜெயச்சந்திர சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் கும்பாபிஷேகத்தை விழாவை நடத்தி வைத்தனர். இதில் பிரம்மதேசம், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !