கருப்பணசாமி, மாடசாமி கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :3852 days ago
ஏர்வாடி ஊராட்சி ஏரான்துறை கிராமத்தில் விநாயகர், பப்பரபுளி முனியசாமி, கருப்பணசாமி, மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அன்னதானம் நடந்தது.