உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி திருக்கல்யாணம் 240 டன் குளிர்சாதன வசதி!

மீனாட்சி திருக்கல்யாணம் 240 டன் குளிர்சாதன வசதி!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.20 முதல் மே 2 வரை நடக்கிறது.

ஏப்.30ல் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக 240 டன் குளிர்சாதன பெட்டி திறந்தவெளியில்
வைக்கப்படுகிறது. திருக்கல்யாணத்திற்கான காணிக்கை மற்றும் பொருளை கோயில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.பிரசாதம் கொடுக்க விரும்புவோர், அது தொடர்பான விபரங்கள், இடம் குறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். உபயதாரர் விபரம் அறிவிப்பு பலகை யில் தெரிவிக்கப்படும். நன்கொடை தர கோயில் நிர்வாகத்தை மட்டுமே அணுகவேண்டும். கோயிலுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கோயில் நிர்வாகம் அல்லது போலீசில் புகார் செய்யலாம் என நிர்வாக அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !