உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்புத்தாண்டு தினம்:திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பில் மாற்றம்!

தமிழ்புத்தாண்டு தினம்:திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பில் மாற்றம்!

தூத்துக்குடி: தமிழ்புத்தாண்டு தினமான ஏப்., 14 ல் திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில், வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தமிழ்புத்தாண்டு தினமான ஏப்., 14ல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 8 க்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கும்.

காலை 9மணிக்கு கலையரங்கில் நாதஸ்வர மங்கள இசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து 10 மணிக்கு கோயில் நாட்குறிப்பு வெளியிடும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் ஆன்மிக சொற்பொழிவும், இன்னிசைக்கச்சேரியும் நடக்கிறது.

பகல் 11 மணிக்கு ஆறுமுகநயினாருக்கு அன்னாபிஷேகமும், 12 மணிக்கு அன்னதானம், மற்ற கால வேளை பூஜைகள் வழக்கம் போல் நடக்கும். மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஞானசேகரன்,
தக்கார் கோட்டை மணிகண்டனும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !