திண்டுக்கல் பங்குனி திருவிழா!
ADDED :3866 days ago
திண்டுக்கல்: பங்குனி திருவிழாவையொட்டி திண்டுக்கல்லில் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் பல அவதாரங்களில் எழுந்தருளினார்.
இதையொட்டி சுவாமி ஏப்., 3 ல் வடமதுரையில் இருந்து பல்லக்கில் புறப்பட்டார். ஏப்., 4 ல் முள்ளிப்பாடி ஆற்றில் எதிர்சேவை நடந்தது.பின் ஏப்., 8 வரை திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், திருமலைசாமிபுரம், நாகல்நகர், பாரதிபுரம், சவுராஷ்டிராபுரத்தில் குதிரை, கருடை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். நேற்றுமுன்தினம் திருஅவதார மண்டகபடியில் சேஷ, ராமர், கிருஷ்ணர், மோகினி அவதாரங்களில் எழுந்தருளினார். நேற்று புஷ்ப பல்லக்கில் சுவாமி கள்ளர் வேடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.