உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி மறு உத்திர திருவிழா!

கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி மறு உத்திர திருவிழா!

விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி மறு உத்திரத்தையொட்டி, ஏராளமானோர் நேர்த்திக்கடன்செலுத்தினர்.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி, கடந்த 3ம் தேதி முடிந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று (10ம் தேதி) மறுஉத்திரதிருவிழா நடந்தது.

இதையொட்டி, கொளஞ்சியப்பர், சித்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றபொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, முடி காணிக்கை செலுத்தி, மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமா னோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !