மலைக்கோட்டையில் நாளை திருப்படி திருவிழா
ADDED :3844 days ago
திருச்சி: திருச்சி திருப்புகழ் திருப்படி திருவிழா கமிட்டி சார்பில், நாளை, (14ம் தேதி) திருப்படித்திருவிழா நடக்கிறது. அன்று காலை, 7 மணிக்கு ஓதுவார்கள், பக்தர்கள் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் இருந்து புறப்பட்டு, திருப்புகழ் மற்றும் துதிப்பாடல்களை பாடியவாறு மலைக்கோட்டையை சுற்றி வலம் வருகின்றனர். காலை, 9 மணிக்கு தாயுமான ஸ்வாமி கோவிலில் உள்ள ஒவ்வொரு படிக்கும் சந்தனம், குங்குமம் இட்டு, பூ சாற்றி கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். காலை, 11 மணிக்கு உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், மட்டுவார் குழலம்மை, தாயுமான ஸ்வாமி மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும். பகல், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.