திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தேர்வு
ADDED :3844 days ago
திருப்பதி: திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு, தேர்வு செய்யப்பட்டு உள்ளது.அறங்காவலர் குழுவின் தலைவராக, திருப்பதி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சதலவாடா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குழுவில் இடம்பெற்றுள்ள, 18 உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, தலா இரண்டு உறுப்பினர்கள் இடம் பெறுவர்.