பெங்களூரு துளிர்கானத்தம்மன் ஆலய விழா!
பெங்களூரு: பாரதி நகர், திம்மையா ரோடு, தேவி துளிர்கானத்தம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு விழா, வரும், 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. முதல் நாளான, 17ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, விநாயகர், சுப்பிரமணிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து ஹோமம், பூஜைகள் நடக்கிறது. இரண்டாம் நாளான, 18ம் தேதி, கோவிலில் நான்காம் ஆண்டை முன்னிட்டு, மகா கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு அம்மனுக்கு வெண்ணெய், பால் குட ஊர்வலம் நடக்கிறது. 9:00 மணிக்கு, ஹோமம், சஹஸ்ர அபிஷேகம் நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, மகா மங்கள ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. மதியம், 1:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 5:00 மணிக்கு அம்மன் பவனி, 6:30 மணிக்கு உறி அடித்தல் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா மங்கள ஆரத்தி நடக்கிறது.