உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளோட்டத்துடன் நிற்கிறது சிவகாசி தங்க தேர்!

வெள்ளோட்டத்துடன் நிற்கிறது சிவகாசி தங்க தேர்!

சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் தங்க தேர் வெள்ளோட்டம் கடந்த 3 வாரத்திற்கு முன் முடிந்தும், தேரோட்டம் நடைபெறாமல் இருப்பது பக்தர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மன் 2012 ல் தெய்வீக பேரவை அமைப்பின் சார்பில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 2013 ல் சுவாமி வீதி உலா வரும் வகையில் மரத்தேர் செய்து கொடுத்தனர். சிறப்பு பெற்ற இச் சிவாலயத்தில் தங்கதேர் உருவாக்க வேண்டும் என பக்தர்கள் கோரினர். அதன்படி தெய்வீக பேரவையின் சார்பில் புதிதாக தங்க தேர் உருவாக்கப்பட்டு கடந்த மாதம் பணிகள் முடிந்து வெள்ளோட்டமும் நடந்தது. பங்குனியில் தேரோட்டம் விழா நடைபெறும் என அறிவித்திருந்தனர். ஆனால் சித்திரை பிறந்தும் தேரோட்டம் விழா நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்து உ<ள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட தங்க தேர் பயன்பாடின்றி உள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தேர் பணிகள் முழுமையாக முடிந்தது குறித்த எந்த ஒரு "ரசிதும் வழங்கப்படவில்லை. 2 நாட்களில் வழங்கப்படும் என நிர்வாகிகள் கூறுகின்றனர். அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தேரோட்டம் விழா நடைபெறும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !