வேங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3831 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி அருகே கோனூர் வேங்கடேசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், திம்மம்மாள், பாப்பம்மாள், செட்டியம்மாள், திருமலம்மாள், சென்னம்மாள், மகாலட்சுமி, வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், தும்பிக்கையாழ்வார், ஹயக்ரீவர், கண்ணன், தன்வந்திரி, சந்தானலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இரண்டு கால யாகசாலை பூஜைகளை, ஆழ்வார்திருநகரி பிரசன்ன பாலாஜி பட்டர் தலைமையிலான குழுவினர் நடத்தினர். விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.