ஆஞ்சநேயர் கோவிலில் கர்நாடக இசைக் கச்சேரி
ADDED :3830 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், லட்ச தீப விழாவை முன்னிட்டு, கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், 92ம் ஆண்டு, லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் மாலை, மாணவியர்களின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது. விழுப்புரம் இசைக்கலைமணி மஞ்சு கண்ணனின், தர்ஷினி இசைப் பயிலக மாணவிகள், பங்கேற்ற கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது. இதில் மாணவிகள் பலரும் பங்கேற்ற, பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.