உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் சென்ற ஆண்டாள் பட்டு!

ஸ்ரீரங்கம் சென்ற ஆண்டாள் பட்டு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் சித்திரை விழாவை முன்னிட்டு ரங்கநாத பெருமாளுக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிய பட்டு செல்வது வழக்கம்.

இதற்கான விழா, நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது. பட்டு, கிளி ஆண்டாளுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, ஸ்தானிகம் ரமேஷ், கிருஷ்ணன், அனந்தராமன், ராஜாராமன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

பின்னர் யானை முன் செல்ல, ஆண்டாள் சூடிய பட்டு கோயில் பிரகாரம் சற்றி வந்து ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !