சோம்நாத்லிங்க தரிசனம் துவக்கம்!
ADDED :3884 days ago
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தமன் கோவிலில், சோம்நாத்லிங்க தரிசனம் நேற்று துவங்கியது.
பிரம்மகுமாரிகள் சார்பில், லாஸ்பேட்டை கொட்டுபாளையத்தில் உள்ள நாகாத்தமன் கோவிலில், சோம்நாத்லிங்க தரிசனம் மற்றும் ராஜயோக தியான படக் கண்காட்சி இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சோம்நாத்லிங்க தரிசனத்தை நேற்று, பா.ஜ., பொதுச் செயலாளர் சாமிநாதன் துவக்கி வைத்தார். நாகாத்தமன் கோவில் அறக்கட்டளை தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். பிரம்மகுமாரிகள் தியான நிலைய சகோதாரி கவிதா, ராஜயோக தியானம் பற்றி பேசினார்.