லட்ச தீப விழா!
ADDED :3938 days ago
திண்டிவனம்: வெள்ளிமேடுபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப விழா நடந்தது திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு தமிழ் புத்தாண்டை யொட்டி லட்ச தீப விழா நடந்தது. சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. வேணுகோபால சுவாமி பஜனை கோஷ்டியினரின் கோலாட்டம் நடந்தது. பாசுரங்கள் பாடபட்டது. பூஜைகளை அர்ச்சகர் ஹரிஹரன் செய்தார்.