ரமண மகரிஷி ஆராதனை விழா
ADDED :3823 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சிவன்கோயில் தெருவில் உள்ள ரமண கேந்திரம், முருகனார் மந்திரத்தில் ரமண மகரிஷியின் 65 வது ஆண்டு ஆராதனை விழா நடந்தது. தாயுமானசுவாமி தபோவன நிர்வாகி பரானந்த மகராஜ், வேதாத்திரி ஆசிரமம் சுப்பராஜ், விவேகானந்த மாணவர் இல்ல நிர்வாகி சிவராம் உள்ளிட்டோர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினர். பக்தர்களால் அட்சர மணமாலை பாராயணம் பாடப்பட்டது. அன்னதானம் நடந்தது.