திருப்புல்லாணியில் 1008 விளக்கு பூஜை!
ADDED :3823 days ago
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் விவேகானந்த கேந்திர நிறுவனர் ஏக்நாத் ரானடேவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1008 விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக நேற்று மாலை 4 மணியளவில் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள், பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன், மூத்த தொண்டர் கிருஷ்ணமூர்த்தி, பேஷ்கார் கண்ணன், ஊராட்சி தலைவர் முனியசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சகோதரி நாகஜோதி செய்திருந்தார்.