உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ரங்கம் ஜீயர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி!

ஸ்ரீ ரங்கம் ஜீயர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி!

விழுப்புரம்: ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் அருளாசி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் ஸ்ரீ  ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் அருளாசி மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.  நேற்று காலை 11:00 மணிக்கு, கோவிலுக்கு வருகை தந்த ஜீயர் சுவாமிக்கு, பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் சப்தகிரி பஜனா மண்டலி  தொல்காப்பிய ரங்கதாஸ் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், ஜீயர் சுவாமிகள் பக்தர்களுக்கு அ ருளாசி மற்றும் துளசி தீர்த்த பிரசாதம் வழங்கினார்.  தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாதர் சுவாமிகள் குறித்து,  ஜீயர் சுவாமிகள் ஆன்மிக சொற்பொழிவு  ஆற்றினார். முன்னாள் எம்.பி., ஆதி சங்கர், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், வள்ளி விலாஸ் பாண்டுரங்கன், மராட்டிய சங்கம் மகாதேவ், எம்.ஜி.ஆர்.,  மன்ற தலைவர் தனுசு, பாபு, கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !