கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :3824 days ago
கரூர்: முன்னாள் முதல்வர் ஜெ., வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும், என்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், சிறப்பு யாகம் துவங்கியது. காலை, 7 மணிக்கு, ஆறுமுகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஸ்கந்த யாகம் நடத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஸ்கந்த யாகம், தொடர்ந்து, ஆறு வாரங்களுக்கு நடைபெறும். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் காளியப்பன், பொருளாளர் முரளி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், அரசு வக்கீல் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.