ஷீரடி சாய் பாபாவின் பாதுகை தரிசன நிகழ்ச்சி!
ADDED :3824 days ago
சேலம் : ஷீரடி சாய் பாபாவின் பாதுகை தரிசன நிகழ்ச்சி, சேலத்தில், நேற்று கோலாகலமாக நடந்தது.சேலம், சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில், ஷீரடி சாய் பாபாவின் பாதுகை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை முதல் பாபாவிற்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அன்னம் தயாரிக்கப்பட்டு அன்னத்தால் லிங்கம் வடிவமைக்கப்பட்டு, பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், பரத நாட்டியம் வீணை இசை நிகழ்ச்சி, பாபாவின் பாதுகை தரிசனம் நடந்தது.