புதன்சந்தை மாரியம்மன் கோவில் விழா துவக்கம்
நாமக்கல் : புதன்சந்தை மாரியம்மன் கோவில் திருவிழா, கம்பம் நடுதலுடன் கோலாகலமாக துவங்கியது. நாமக்கல் அடுத்த புதன்சந்தையில், மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 28ம் தேதி துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று கம்பம் நடும் விழா நடந்தது.கிணற்று மேட்டில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதை தொடர்ந்து, கோவில் முன் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். வரும், 28ம் தேதி வரை, தினமும், தீர்த்தக்குடம் எடுத்து வரும் பக்தர், கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி ஸ்வாமியை வழிபட்டுச் செல்வர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.