உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயிலில் உலக லட்சார்ச்சனை
ADDED :3929 days ago
கீழக்கரை : உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோயிலில் உலக நன்மைக்காக லலிதா சகஸ்ரநாமத்தின் மூலம் லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி, மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேவேந்திர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர், கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.